பாதகம் செய்பவரை கண்டால் -நாம்
பயம் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
துன்பம் நெருங்கி வந்த போதும் -நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வமுண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
என் இரண்டு கண்கள்
![]() |
மகன் முகில் கார்த்திக், மகள் ஜெய ரூபிணியுடன் |
என் இரு கண்களைப் பற்றி நான்...
![]() |
ஒரு வயதில் ரூபிணி |
நிலவிற்கு வயது ஒன்று
குளோனிங் நிலவு
அவள் முகம்!
மின்னலின் சாயல்
அவள் விழிகள்!
வெல்வெட் சிறகுகள்
குளோனிங் நிலவு
அவள் முகம்!
மின்னலின் சாயல்
அவள் விழிகள்!
வெல்வெட் சிறகுகள்
அவள் விரல்கள்!
பூவின் எடை
அவள் உடல் !
பூவின் எடை
அவள் உடல் !
தென்றலின் மேன்மை
அவள் தேகம் !
ஒன்ஸ்மோர் கேட்கும்
அவள் குறும்பு
பசி வந்தால்
மம்... மம்...
குஷி வந்தால்
தைய , தையா
தேயாத நிலவாய்
வாடாத மலராய்
வளர்ந்து விட்டாள்
என் அன்பு மகள்
அந்த நிலவிற்கு
வயது ஒன்று
வாழ்த்த வாருங்கள்
ஆண்டு நூறு வாழ!
ஆச்சி ..தாத்தா...
அம்மா ... அப்பா ...
அத்தை... மட்டுமல்ல
ஆசை ஆசையாய்
நேசம் பொங்கிட ...
உங்கள் முகம் தேடியும்
வாசல் நோக்கி
தவழ்ந்து வருவாள்
எங்கள் அன்பு ஜெயருபினி
ஒன்ஸ்மோர் கேட்கும்
அவள் குறும்பு
பசி வந்தால்
மம்... மம்...
குஷி வந்தால்
தைய , தையா
தேயாத நிலவாய்
வாடாத மலராய்
வளர்ந்து விட்டாள்
என் அன்பு மகள்
அந்த நிலவிற்கு
வயது ஒன்று
வாழ்த்த வாருங்கள்
ஆண்டு நூறு வாழ!
ஆச்சி ..தாத்தா...
அம்மா ... அப்பா ...
அத்தை... மட்டுமல்ல
ஆசை ஆசையாய்
நேசம் பொங்கிட ...
உங்கள் முகம் தேடியும்
வாசல் நோக்கி
தவழ்ந்து வருவாள்
எங்கள் அன்பு ஜெயருபினி
![]() |
ஒரு வயதில் முகில் |
பயண வழியெங்கும்
முட்களும்
வேலிகளும்
காயப்படுத்திய
மகிழ்ச்சி தொலைத்த
ஒரு நாளில்
எங்கள் தோட்டத்தில்
இன்னொரு பூ
மலர போகிறது
என்ற தகவல் வந்தது.
வறுமை விலாசங்களை
வரிவிடாமல்
படித்த களைப்பு
மனதை கனக்க
ஒன்றே போதும்
என்று முயற்சிகள்
தோற்று போயின
எட்டு மாதத்தில்
இந்த உலகத்தை
எட்டி பார்த்த
குட்டி அவன்
பிறந்த போது
உள்ளங்கை அளவில்
இருந்தவன் இப்போது
எங்கள் உள்ளங்களை
கொள்ளை கொள்கிறான்
கடல் விட பெரியது...
அவனது கனவுகள்
அளவிட முடியாதது
அவன் ஆசைகள்
ஊர்வன, பறப்பன
இயந்திரங்கள்...
இனிப்புகள்...
மனிதர்கள்...
மிரட்டும்
மலை தொடர்
நனைக்கும்
மழை சாரல்
என அவனது ரசனை
எல்லையற்றது
எப்போது
கோடு பழகினான்
என்றைக்கு
வட்டம் எழுதினான்
என்று இன்னும்
நினைவில் இல்லை
இப்போது
வண்ணங்கள்
அவன் வாழ்கை
இல்லம் எங்கும்
ஓவியங்கள்
ஏன் ... எதற்கு
எப்படி - என
கேள்விகள் எழுப்பி
உலகை புரட்டும்
முகில் போன்ற
குழந்தைகளின்
சின்னஞ்சிறு
கரங்களை பற்றி கொண்டு
வலம் வரும்போதுதான்
இந்த பூமியின்
சொருபம் புரிகிறது
முட்களும்
வேலிகளும்
காயப்படுத்திய
மகிழ்ச்சி தொலைத்த
ஒரு நாளில்
எங்கள் தோட்டத்தில்
இன்னொரு பூ
மலர போகிறது
என்ற தகவல் வந்தது.
வறுமை விலாசங்களை
வரிவிடாமல்
படித்த களைப்பு
மனதை கனக்க
ஒன்றே போதும்
என்று முயற்சிகள்
தோற்று போயின
எட்டு மாதத்தில்
இந்த உலகத்தை
எட்டி பார்த்த
குட்டி அவன்
பிறந்த போது
உள்ளங்கை அளவில்
இருந்தவன் இப்போது
எங்கள் உள்ளங்களை
கொள்ளை கொள்கிறான்
கடல் விட பெரியது...
அவனது கனவுகள்
அளவிட முடியாதது
அவன் ஆசைகள்
ஊர்வன, பறப்பன
இயந்திரங்கள்...
இனிப்புகள்...
மனிதர்கள்...
மிரட்டும்
மலை தொடர்
நனைக்கும்
மழை சாரல்
என அவனது ரசனை
எல்லையற்றது
எப்போது
கோடு பழகினான்
என்றைக்கு
வட்டம் எழுதினான்
என்று இன்னும்
நினைவில் இல்லை
இப்போது
வண்ணங்கள்
அவன் வாழ்கை
இல்லம் எங்கும்
ஓவியங்கள்
ஏன் ... எதற்கு
எப்படி - என
கேள்விகள் எழுப்பி
உலகை புரட்டும்
முகில் போன்ற
குழந்தைகளின்
சின்னஞ்சிறு
கரங்களை பற்றி கொண்டு
வலம் வரும்போதுதான்
இந்த பூமியின்
சொருபம் புரிகிறது
ஜெயரூபிணி - ராமன் விழியிலும் ஈரம் கசியும்
![]() |
கற்பனை நாயகி ஜெயரூபிணி |
அமைதியான குணம், அடக்க சுபாவம் , நடு நடுவே மனசு கொண்டாட நினைக்கும் போது , ஆர்பாட்டமான நடனம் என்று சுற்றி இருப்பவர்களை சொக்க வைப்பாள் குறும்பு பெண் ஜெயருபினி .
இவள் பேசும் வார்த்தைகளுக்கு சில சமயம் மொழி தேவைப்படாது. விழிகள் மட்டுமே போதும். பார்வையாலே சேதி சொல்லுவாள் . படிப்பில் நம்பர் ஒன் . சன் டிவி , சுட்டி டிவி ஜெயா டிவிகளில் சின்ன வயதிலேயே திறமை காட்டியவள். தமிழ் , ஆங்கில கதைகளும் , கவிதைகளும் கூட இவள் விரல்களில் எட்டி பார்க்கும் .
ஸ்ரீ ராம் ஜெய ராம், ஜெய ஜெய ராம் என்று கண்கள் மூடி, இவள் தியானிக்கும் பக்தியை பார்த்தால் , அந்த ராமபிரான் விழிகளிலும் ஈரம் கசியும்.
ரூபியின் படைப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு...
முகில் கார்த்திக் - இறைவன் தந்த வரம்
துறு துறு கண்கள் . துள்ளி குதிக்கும் நடை . மலர்களையும், மரங்களையும் இமை அசைக்காமல் பார்க்கும ரசனை. மிரள வைக்கும் அனகோண்டா, அலற வைக்கும் டைநோசர்களையும் விரும்பி ரசிக்கும் வினோதம். இரண்டாவது வகுப்பு படிக்கும் வரை வெறும் கோடுகளையும் , வட்டங்களையும் வரையவே சிரமபட்ட இந்த குட்டி பையன் கரங்களில் இப்போது ஓவிய பென்சில்களும் , பெயிண்ட் ப்ருஷ்களும் நடனம் பயிலுகின்றன.
எந்த பிரமாண்டங்களையும் சில நிமிடங்களில் பட பட என வரையும் திறமை . வெறும் பென்சில் கோடுகளிலேயே எந்த உணர்வுகளையும் ஓவியத்தில் பிரதிபலிக்க செய்யும் திறமையை இந்த சிறுவனுக்கு அருளி இருக்கிறாள் அன்னை சரஸ்வதி.இத்தனைக்கும் இவன் எந்த ஆசிரியரிடமும் இதுவரை பயிற்சி எடுத்ததில்லை .
இயற்கையும் , இறைவனுமே இவனுக்கு கிடைத்த வரம்.
முகிலின் படைப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு...
முகிலின் படைப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு...
என் வாழ்க்கைப் பயணத் துணை
மனைவி சபரியுடன் |
என் உயிருக்கும், உடலுக்கும் வித்தானவர்கள்
![]() | |
என் தாய் வே. ஞானலஷ்மி, தந்தை சி. வேலாயுதம் |
No comments:
Post a Comment